தமிழகம் முழுவதும் கன மழை:7 பேர் பலி - இன்று முதல் கத்திரி
சென்னை:தமிழகம் முழுவதும் ேநற்று பெய்த கன மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு நிலை ஸ்தம்பித்தது.
தமிழகத்தின் தென் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் ெவயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலையுடன் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல பகுதிகளில் நீர் சூழ்ந்தது. மரங்கள் விழுந்தது, மின்கம்பிகள் அறுந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் 7 பேர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக காட்டுமன்னார்ேகாவிலில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. சென்னை நகரிலும் நேற்று காலை சுமார் அரைமணி நேரம் அளவுக்கு நல்ல மழை பெய்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
திருத்தணி அருகே இருசம்மாள் என்ற பெண் மின்னல் தாக்கி இறந்தார். ராஜாநகர் என்ற பகுதியில் மின்னல் தாக்கி 2 மாடுகள் இறந்தன.
திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தில் மின்னல் தாக்கி கருணாமூர்த்தி என்பவர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி அருகே தமிழரசன் என்ற மாணவன் மின்னல் தாக்கிப் பலியானான்.
வேப்பபம்பட்டி கிராமத்தில், ஒரு வீடு இடி விழுந்து எரிந்தது. இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த 15 மூட்டை நெல் எரிந்து ேபானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மங்கை என்ற இளம் பெண் மின்னல் தாக்கி இறந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இரண்டு பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.
மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில், இடி தாக்கிய அதிர்ச்சியில், கணேசன் என்பவர் பேச்சிழந்தார். லட்சுமிபுரத்தில், 4 பேர் காயமடைந்தனர்.
கோைவ, பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. மதுரை நகரிலும் மழை வெளுத்து வாங்கியது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னமே இந்த மழைக்குக் காரணம், இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறுமா என்பது நாளை மறுநாள்தான் தெரிய வரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் ெதரிவித்துள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications