திருவண்ணாமலை: கலசங்கள் திருட்டு போகவில்லை- நிர்வாகம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி கவசங்கள் திருட்டு போகவில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனுஷ், அறங்காவலர்கள் கோவிந்தன், மணிவர்மா, பானுமதி அருணகிரி, சீனுவாசன் ஆகியோர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்,
பழமையும், புகழுமிகக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோயிலில் இருந்த தங்கம், வெள்ளி கவசங்கள் திருட்டு போனதாக பொய்யான செய்தி சில நாளிதழ்களில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இது தவறான செய்தி, கவசங்கள் திருட்டு போனதாக வெளியான செய்தி குறித்து கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பொக்கிஷதாரர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட பிரதோஷ நாயகர் கவசம், உபயதாரரால் வழங்கப்பட்டது. அது சரியாக பொருத்தாததால் சரி செய்து கொடுக்கும் படி உபயதாரருக்கு கூறப்பட்டுள்ளது.
அந்த பணி முடிந்ததும், உபயதாரரிடம் இருந்து கவசத்தை பெற்று கோயில் ஆவணத்தில் பதிவு செய்யப்படும். கோயில் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
-
சைதாப்பேட்டையில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு? கு.பா. கிருஷ்ணன் விளக்கம் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications