மகளுடன் குடும்பம் நடத்த மறுத்த மருமகன்உயிரோடு கொளுத்த முயன்ற மாமனார்
கடலூர்:மகளுடன் குடும்பம் நடத்த மருமகன் மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மருமகனை தீவைத்துக் கொளுத்த முயன்று கைதானார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நெசவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு விழுப்புரம் மாவட்டம் அரகண்ட நல்லூர் சொந்த ஊராகும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கல்யாணம் நடந்தது. 3 குழந்தைகளும் உள்ளனர். சில காலமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை நடக்குமாம்.
இந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய விஜயலட்சுமி தனது தாய் வீட்டுக்குச் செல்லாமல் கோவைக்குச் சென்று அங்கு ஒரு கார்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.
இதை அறிந்த தந்தை மணி அங்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் நெசவனூர் சென்று மருமகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அங்கு வைத்து பஞ்சாயத்து நடந்துள்ளது. மகளுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார் மணி. ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஹரிகிருஷ்ணன். இதனால் கோபம் கொண்ட மணி உள்ளிட்ட நான்கு பேர் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு சாகப் போவதாக கூறினார். இதைக் கேட்ட மணி, நீ என்ன சாவு, நானே உன்னைக் கொளுத்தி விடுகிறேன் என்று கூறி தீவைத்துள்ளார்.
உடலில் தீப்பிடித்து எரிந்ததால் துடித்தார் ஹரிகிருஷ்ணன். அக்கம் பக்கத்தினர் அவரை வீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications