போலி என்கவுண்டர்: 2 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
அகமதாபாத்:குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் 3 பேரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அகமதபாத்தைச் சேர்ந்த சொராப்தீன் ஷேக்கையும் அவரது மனைவி கெளசர் பீபியையும் காவல்துறையினர் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
இதில் ஷேக்கை போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதை நேரில் பார்த்த பிரஜாபதி என்பவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர். கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்து எரித்து விட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைச் சரக டிஐஜியாக இருந்தவர் வன்சாரா. ராஜ்குமார் பாண்டியன் உளவுப் பிரிவு எஸ்.பியாக, இருந்தார்.
இதற்கிடையே, வன்சாராவின் சொந்த கிராமமான இல்லால் கிராமத்தில், அவரது வீட்டில் சிஐடி போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வன்சாராவின் வீட்டில் உள்ள கிணற்றில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டுள்ளது. இந்த அறைக்குக் கீழ்தான் கெளசர் பீபியின் கருகிய உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த அறையை இடித்து விட்டு கிணற்றில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
லோக்சபா, ராஜ்யசபா ஸ்தம்பிப்பு:
இந்த நிலையில், போலி என்கவுண்டர் விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தைக் கலக்கியது.
மக்களவை கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என இடதுசாரி உறுப்பினர்களும், காங்கிரஸாரும் கோரிக்கை விடுத்தனர் ஆனால் இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி முயற்சித்தார். ஆனால் அமளி குறையவில்லை. இதையடுத்து ஒரு மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications