பெரியாறு அணையில் கேரள குழு ஆய்வு
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு நியமித்துள்ள அணை பாதுகாப்புக் குழு, பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்த இன்று காலை தமிழகம் வந்தது
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்தது. இதற்கு அணை பலவீனமாக உள்ளதாக கூறி நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அரசு மறுத்துவிட்டது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அணையின் பலத்தை பரிசோதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நிபுணர்கள் குழு ஆராய்ந்து அணை பலமாக இருப்பதாகவும், 142 அடி வரையிலும் அணையின் உயரத்தை கூட்டலாம் என பரிந்துரைத்தது.
இதையடுத்து 142 அடியாக அணையின் உயரத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை கிடப்பில் போட்ட கேரள அரசு தனது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
மேலும் அணையின் பலத்தை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் அணை பாதுகாப்பு குழுவையும் அமைத்தது. இந்த குழு இன்று காலை முல்லை பெரியாறு அணைக்கு வந்தது.
இதில் கேரள தலைமை பொறியாளர் சசி, மின்சார தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அணையை ஆய்வு செய்து முடிவை கேரள அரசுக்கு அறிவிப்பர். பின்னர் கேரள அரசு இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications