பீடியில் மண்டை ஓடு படம்: மறுபரிசீலனை செய்ய குழு
டெல்லி:பீடிக் கட்டுக்களில் மண்டை ஓட்டுப் படத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை கைவிட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பீடிக் கட்டுக்களில் மண்டை ஓட்டுப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும் என அமைச்சர் அன்புமணி தலைமையிலான நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பீடித் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து இந்த உத்தரவை கைவிட வேண்டும் என பிரதமருக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பீடித் தொழிலாளர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் பீடி அதிபர்களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
இந் நிலையில் கருணாநிதியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தொழலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இன்னொருவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
இக்குழு தனது அறிக்கையை 20ம் தேதிக்குள் மத்திய அரசிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கருணாநிதியின் கோரிக்கையை ஆந்திர அரசும் ஆதரித்துள்ளது.
மண்டை ஓடு படத்தை நீக்க முடிவு செய்யப்பட்டால், பாமக-திமுக இடையே ஒரு புதிய மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications