சன் டிவி-தினகரன் ஊழியர்கள் சாலை மறியல்
மதுரை:அழகிரியின் ஆதரவாளர்கள் வெறித்தனமாக தாக்கியதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறி மதுரை-சென்னை நெடுஞ்சாலையில், சன் டிவி, தினகரன் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். போலீஸாருடனும் அவர்கள் கடும் வாக்குவாதம் நடத்தினர்.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று காலை நடத்திய வெறித் தாக்குதலால் நிலைகுலைந்து போன சன் டிவி, தினகரன் ஊழியர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் 3 அப்பாவிகளின் உயிர்கள் பறி போய் விட்டன.
ரெளடித்தனமான தாக்குதலைத் தடுக்க போலீஸார் உடனடியாக வராததால், கொதிப்படைந்த ஊழியர்கள் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரளாக சென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்து மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. அன்பு, அனைவரையும் கலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதைக் கேட்காத ஊழியர்கள், அழகிரிதானே உங்களுக்கு முக்கியம், பறிபோன 3 உயிரை உங்களால் தர முடியுமா.
நாங்கள் கலைய மாட்டோம். வேண்டுமானால் தடியடி நடத்திக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினர்.
நீண்ட நேரம் அவர்களும் போலீஸாரும் கடுமையாக வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். உயர் அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்திய பின்னரே கலைந்து சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications