வரதட்சணை சட்டத்தில் வருகிறது மாற்றம்
டெல்லி: பெண்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது அமலில் உள்ள 1961ம் ஆண்டு வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்குள்தன் வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் கொடுக்க முடியும். 7 ஆண்டுகளைத் தாண்டிய பெண்களுக்கு இந்த சட்டம் உதவாது.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்குள் மர்மமான முறையில் இறந்து விட்டால் அதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அவர் கொடுக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
தற்போது இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, 7 ஆண்டு கால உச்சவரம்பு என்பதை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 7 ஆண்டுகள் நீக்கப்பட்டு, மனைவி எப்போது இறந்தாலும் அவர் மரணத்தில் சந்தேகம் என புகார் வந்தால் அதனை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என மாற்றம் செய்யப்படுகிறது.
இதன் மூலம் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என மத்திய அரசு கருதுவதால், இது குறித்து பரிசீலித்து விரைவில் மாற்றம் கொண்டு வரவிருக்கிறது.
இது குறித்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் கிரிஜாலியாஸ் கூறுகையில், பெண்களுக்கு வரதட்சணை கொடுமை என்பது கல்யாணமாகி 30 வருடங்கள் வரையிலும் கூட நீடிக்கிறது. இதுபோன்ற கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தில் நிச்சயம் மாற்றம் தேவையாக இருக்கிறது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications