பெரியாறு தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல: பிரேமசந்திரன்
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானதல்ல என கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண், 110 வருட முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. அதை தமிழகம் நிர்வகித்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு பாதுகாவலர் மட்டுமே. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையிருக்கிறது. ஆனால் இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அல்ல.
இந்த அணை அமைந்துள்ள இடம் கேரள அரசினால் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர், அணை தமிழகத்திற்கு சொந்தம் என்று கூறியிருப்பது தவறான தகவலாகும்.இதை அமைச்சர் வேண்டுமென்றே கூறியிருப்பார் என கருதவில்லை.
ஆனால் மத்திய அமைச்சரின் விளக்கம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாதிப்பதாக அமையும். எனவே மத்திய அரசு இது தொடர்பான பிழையை உடனடியாக சரி செய்து வெளியிட வேண்டும்.
கேரள அணை பாதுகாப்பு குழு முல்லை பெரியாறு அணையை சுற்றி பார்த்துவிட்டு அணையின் கீழ் பகுதி நல்ல நிலையில்லை என கூறியுள்ளது. அணையில் விரிசல் உள்ள இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications