கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொல்ல மகன்முயற்சி: யாகவா முனிவர் மனைவி புகார்
சென்னை:கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னைக் கொலை செய்ய மகன் முயற்சிப்பதாக மறைந்த யாகவா முனிவரின் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தவர் யாகவா முனிவர். பரபரப்பு சாமியாராக விளங்கியவர். பறவை பாஷை தெரியும் என கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர். தனக்குத் தானே சமாதியும் கட்டிக் கொண்டவர்.
யாகவா முனிவருக்கு புஷ்பம்மாள் என்ற மனைவியும், சரண் என்ற மகனும் உள்ளனர். யாகவா முனிவர் தற்போது மறைந்து விட்டார். அவரது வீட்டில் புஷ்பம்மாள், சரண், மனைவி ரேணுகாதேவி மற்றும் 2 குழந்தைகள் வசித்து வருகின்றனர்.
தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார் புஷ்பம்மாள். அந்த இடத்தில் சங்கீதா என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவருக்கும், சரணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த புஷ்பம்மாளும், ரேணுகாதேவியும் சரணைக் கண்டித்துள்ளனர்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை சரண். மாறாக தாயையும், மனைவியும் மிகவும் இழிவாகப் பேசி திட்டியுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது தாயார் பெயரில் உள்ள சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றித் தருமாறும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புஷ்பம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகனும், சங்கீதாவும் சேர்ந்து கொண்டு என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். கத்தியால் குத்த வருகின்றனர்.
சங்கீதாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. இந்த நிலையில் எனது மகனை வசியப்படுத்திக் கொண்டு எனக்கு எதிராக தூண்டி விட்டு சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நினைக்கிறார்.
எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் புஷ்பம்மாள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications