ஆள் கடத்தல்: மேலும் ஒரு எம்எல்ஏ சரண்
ஹைதராபாத்:ஆள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ போலீஸாரிடம் சரணடைந்தார்.
டெல்லியிலிருந்து ஆள் மாறாட்டம் மூலம் கனடாவுக்கு ஒரு பெண் மற்றும் பையனுடன் (மனைவி, மகன் என்று கூறி) செல்ல முயன்று கைதானார் பாஜக எம்.பி. பாபுபாய் கட்டாரா.
இதையடுத்து ஆள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தெலுங்கான ராஷ்டிரிய கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு இந்த விவகாரத்தில் பெரும் தொடர்புகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சமீபத்தில் எம்.பி. நரேந்திராவை தெலுங்கானா கட்சி சஸ்பெண்ட் செய்தது. மேலும் லிங்கய்யா என்ற எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த பாபுராவ் என்ற இன்னொரு தெலுங்கானா எம்.எல்.ஏ ஹைதராபாத் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் சரணடைந்தார்.
இவர் கட்டாரா கைதானவுடன் தலைமறைவானவர். சமீபத்தில், ஆள் கடத்தல் வழக்கில் முக்கியத் தொடர்புடைய புரோக்கர் ரஷீத் என்பவர் ஆந்திர போலீஸாரிடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், பாபுராவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications