டெல்லியில் தமிழக பெண்கள் மீது தாக்குதல்
டெல்லி:டெல்லியில் நடந்த முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழா பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற தமிழக பெண்கள் மீது மேற்கு வங்க குழுவினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் காயமடைந்தனர்.
மீரட் நகரில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் மத்திய இளைஞர் நல்வாழ்வுத் துறை சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேற்கு வங்கக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், தமிழக குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் கோவையைச் சேர்ந்த இன்பா, வசந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். வசந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக குழுவினர் தங்களது முகாமுக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டெல்லி உதவி காவல் ஆணையர் கருணாகரன் வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினார். தமிழக பெண்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழக குழுவினர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு திகார் சிறையில் பணியில் உள்ள தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications