மதுரை வன்முறை: மேயர் கோர்ட்டில் சரண்
மதுரை:மதுரையில் தினகரன் கருத்துக் கணிப்பு தொடர்பாக நடந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கில், மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 3 பேர் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழைமை மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நகர் முழுவதும் தினகரன் நாளிதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தினகரன், சன் டிவி அலுவலகமும் தாக்கி தீவைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட 3 பேர் இன்று மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பின்னர் அவர்கள் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி ரவீந்திரன் மூன்று பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications