மதுரை கலவரம்-ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு
டெல்லி:நாடாளுமன்றத்தின் ராஜ்யசாவில் மதுரை வன்முறை சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதியளிக்காததால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் உள்ளனர்.
இன்று ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் பி.ஜி. நாராயணன் எழுந்து, மதுரையில் தினகரன், சன் டிவி மீது நடந்த தாக்குதல், 3 பேர் கொலை செய்யப்பட்டது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயர் ரகுமான் கான், இது தொடர்பாக நீங்கள் கொடுத்த நோட்டீஸை சபாநாயகர் ஏற்கனவே நிராகரித்துவிட்டார். இதனால் இந்தப் பிரச்சனையை இப்போது கிளப்பாதீர்கள். இப்போது அதை விவாதிக்க முடியாது என்றார்.
இைதயடுத்து அதிமுக உறுப்பினருக்கும் துணை சபாநாயருக்கும் இது தொடர்பாக சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது.
இதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நேற்று அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலுவும் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications