தமிழ் மீது பாய்ந்த ஒரிஸ்ஸா எம்பி!!!
டெல்லிதமிழைத் தவிர மற்ற மாநில மொழிகளுக்கு ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்று கூறி நாடாளுமன்றத்தில் இன்று பிரச்சனை கிளப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த ஒரிஸ்ஸா எம்பி திரிபாதி எழுந்து ஒரு பிரச்சனையை கிளப்பினார்.
அவர் பேசுகையில், ரயில்வேயில் மும்மொழிக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் ரயில்கள், ரயில் நிலையங்களில் தமிழிலும் எழுதுகிறார்கள். பிற மாநிலங்களில் ரயில்வே மாநில மொழிகளை மதிப்பதில்லை.
அதே போல பிற மாநிலங்களில் இருந்து கிளம்பும் ரயில்களில் அந்த ரயில் போய்ச் சேரும் ஊரின் பெயரை இந்தி, ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள். ஆனால், அது தமிழ்நாட்டுக்குப் போகும் ரயிலாக இருந்தால் மட்டும் தமிழிலும் எழுதுகிறார்கள். அதே நேரத்தில் பிற தென் மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் அந்தந்த மாநில மொழியில் ஊர் பெயரை எழுதுவதில்லை என்றார்.
இதையடுத்து திரிபாதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. இதனால் அவையில் பெரும் கூச்சல் நிலவியது.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலையிட்டு, உங்களுக்கு அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணமில்லை என்று கூறி அவையை ஒத்தி வைத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications