மும்பை குண்டுவெடிப்பு-5 பேருக்கு 3 ஆண்டு சிறை
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பில், 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேரை குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று முதல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி 100 பேரும் (சஞ்சய் தத் தவிர) நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் அப்பாஸ், இப்ராகிம், யஷ்வந்த் பாயின்கர், ரஷீத் ஆல்வார், ஷரீப் ஆதிகர் 5 மீனவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
இவர்கள் ஐந்து பேரும் டைகர் மேமன் கும்பலுக்கு படகுகள் மூலம் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஐந்து பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications