68 நாட்கள் புலிகளின் பிடியில் ..மீண்ட மீனவர்கள் பரபரப்பு பேட்டி!
சென்னை:விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு 68 நாட்களாக சிறை வைக்கப்பட்டு மீண்டு 11 தமிழக மீனவர்ளும் தாங்கள் பட்ட பாட்டை கண்ணீருடன் விளக்கியுள்ளனர்.
கன்னியாகுமரியிலிருந்து கடந்த மார்ச் 6ம் தேதி 12 மீனவர்கள் (அவர்களில் சைமன் என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர்) காணாமல் போனார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றிருக்கலாம் என முதலில் நினைக்கப்பட்டது.
![]() |
ஆனால் அவர்களை விடுதலைப் புலிகள்தான் பிடித்துச் சென்றிருப்பதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. மத்திய அரசுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இரு பிரிவுகளாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். கேரளாவைச் சேர்ந்த சைமன் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை தனியாக படகுடன் புலிகள் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களும் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது அவர்கள் முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் முதல்வரிடம் விளக்கினர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் கருணாநிதி அனைவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைவரும் டிஜிபி அலுவலகம் கொண்டு வரப்பட்டனர். அங்கு டிஜிபி முகர்ஜி முன்னிலையில் அவர்கள் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் மீனவர்கள் சார்பில் கிளமென்ட்ஸ் என்ற மீனவர் நடந்தது குறித்து விவரித்தார்.
கிளமென்ட்ஸ் கூறுகையில், ஏர்வாடி பகுதியில் கடலில் நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென விடுதலைப் புலிகள் 2 பைபர் கிளாஸ் படகுகளில் வந்து எங்களை அவர்களது படகுகளில் ஏறுமாறு கூறினார்கள். பிறகு அவர்களே, எங்களை படகுகளில் ஏற்றி விட்டனர்.
எங்களுடன் வந்த கேரளாவைச் சேர்ந்த சைமனை மட்டும் தனியாக ஒரு படகில் கொண்டு சென்றனர். அவரையும் எங்களுடன் அழைத்துச் செல்லுமாறு நாங்கள் கேட்டபோது அதற்கு மறுத்து விட்டனர்.
பிறகு எங்களை மன்னார் காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று அங்கு கிட்டத்தட்ட 35 நாட்கள் சிறை வைத்தனர். பாம்புகள், பல்லிகளுடன் நாங்கள் மிகவும் சுகாதாரமற்ற சூழலில் தங்க வைக்கப்பட்டோம். நாங்கள் 11 பேரும் படுப்பதற்கு 5 பாய்கள் மட்டுமே தரப்பட்டன.
எதற்காக எங்களை பிடித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, நீங்களும் தமிழர்கள்தானே, நாம் ஒரே ரத்தம்தானே, உங்களது படகு மூலம் எங்களுக்கு சில காரியங்கள் நடக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் உங்களை அழைத்து வந்துள்ளோம்.
கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். வேலை முடிந்ததும் உங்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு போய் விடுகிறோம். தப்பிக்க முயல வேண்டாம். மீறினால் சுட்டு விடுவோம் என்று கூறினர்.
அதன் பின்னர் எங்களை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு சென்றனர். மாலையில் ஒரு வண்டியில் ஏற்றிச் சென்று அதிலேயே வைத்திருந்தனர். எங்களை எங்காவது கூட்டிச் செல்வதாக இருந்தால் கண்களைக் கட்டியபடிதான் கொண்டு சென்றனர்.
ஒருமுறை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் சண்டை நடந்தது. இதையடுத்து எங்களை பதுங்கு குழியில் படுக்குமாறு கூறினர். பிறகு வேறு இடத்துக்கு மாற்றினர்.
இவ்வாறு மாறி மாறி போய்க் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் அலுமினிய ஷீட் போடப்பட்ட ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்தடோம். அங்கு எங்களுக்கு நல்ல சாப்பாடு தரப்பட்டது. எங்களையும் சமைக்க அனுமதித்தார்கள்.
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இருந்தது. அனைவரும் இலங்கைத் தமிழில் பேசினர். அவர்கள் கொண்டு சென்ற இடங்களிலும் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கப் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.
5 நாட்ளில் விட்டு விடுவதாக கூறி 68 நாட்கள் அவர்கள் சிறையில் இருந்தோம். இத்தனை நாட்களிலும் அவர்கள் யாரும் எங்களை துன்புறுத்தவில்லை. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ராமேஸ்வரம் அருகே உள்ள இரணைத் தீவுப் பகுதியில் எங்களை கொண்டு வந்து விட்டனர்.
அப்போது அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அழைத்து, எங்களை பத்திரமாக கரையில் கொண்டு போய் சேர்த்து விடுமாறு கூறினார். செய்யத் தவறினால் இனிமேல் இப்பகுதியில் மீன் பிடிக்க முடியாது என்று அவர்களை எச்சரித்தனர்.
அதன்பிறகு தமிழக மீனவர்கள் எங்களை ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள் வேறு எதற்காகவும் எங்களைக் கடத்தவில்லை. எங்களது படகு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காகத்தான் கடத்திச் சென்றனர் என்றார் கிளமென்ட்ஸ்.
இதையடுத்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்க முயன்றனர். ஆனால் அப்போது குறுக்கிட்ட கியூ பிரிவு அதிகாரி நாஞ்சில் குமரன், இன்னும் அவர்களிடம் நாங்கள் பல தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. மீனவர்கள் வீடு திரும்பிய பின்னர் அவர்களை நேரில் பார்த்து உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளளாம் என்றார்.
புலிகளின் கடத்தல் உறுதியானது: டிஜிபி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி முகர்ஜி, 11 மீனவர்களும் விடுதலைப் புலிகள்தான் தங்களைக் கடத்தியதாக தெளிவாக கூறியுள்ளனர். இதன் மூலம் புலிகள்தான் தமிழக மீனவர்களை கடத்திச் சென்றதாக நான் முன்பே கூறியது உறுதியாகியுள்ளது.
இவர்களுடன் சென்ற கேரளாவை சேர்ந்த சைமன் என்ற மெக்கானிக் என்ஜினியரையும், கிருஷ்ணா என்ற படகையும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். 17ம் தேதி இரவு இந்திய மீனவர்களிடம் 11 மீனவர்களையும் ஒப்படைத்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் வராமல் புலிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு என்ன ஆனது என்று தெரியவில்லை.
அதேபோல அவர்கள் தனியாக விடுவித்த கேரள மீனவரான சைமன் தற்போது மாலத்தீவு கடலோரப் படையின் பிடியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை அழைத்துக் கொண்டு சென்ற நான்கு விடுதலைப் புலிகளும் மாலத்தீவு கடலோரப் படையிடம் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார் முகர்ஜி.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications