ஆட்சி கவிழப் போகிறது - வைகோ ஆரூடம்
Subscribe to Oneindia Tamil
மதுரை இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், மதிமுக உருவாகி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்த 13 ஆண்டுகளில் மதிமுக கடந்து வந்த பாதை பல, சந்தித்த சோதனைகள், இடையூறுகள் பல. 14வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் மதிமுகவுக்கு இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து விட்டது. திருட்டு, வழிப்பறிகளும் ஏராளம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் திமுக ஆட்சி கலையும். அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications