மதுரை அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
மதுரை:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு நரிமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொண்டையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சிறுவன் இறந்து போனான்.
இதனால் கொதிப்படைந்த சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சிவகுருநாதன், மயக்க மருந்து கொடுத்த அவரது மனைவி டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் கோபமடைந்து போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரையில் கடந்த 18ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு டாக்டர்கள் குதித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாளை மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளும் போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டிருந்தன.
இதையடுத்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மதுரை கலெக்டர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரும் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் நிர்வாகிகளின் சில கோரிக்கைகைள் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications