விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு பெரிதாக சிக்கவில்லை
சென்னைமுன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் விஸ்வநாதன். இவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடந்தது. சென்னை, திண்டுக்கல்லில் உள்ள விஸ்வநாதனின் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
நத்தம் அருகே வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ள விஸ்வநாதனின் வீடு, பூர்வீக ஊரான உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனின் தம்பி ஜெயராஜ் வீடு, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள விஸ்வநாதனின் நண்பர் ஜனகரின் வீடு, உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனின் தந்தை வசிக்கும் வீடு,
திண்டுக்கல்லில் உள்ள விஸ்வநாதனின் அண்ணன் மேகநாதனின் வீடு, சென்னையில் உள்ள விஸ்வநவாதனின் மகன் அமர்நாத் வசிக்கும் அபார்ட்மென்ட், சென்னை தி.நகரில் உள்ள விஸ்வநாதனின் மகனுக்குச் சொந்தமான அப்போலா கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம், வட பழனி பஸ் நிலையம் அருகே உள்ள அப்போலோ கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது. எந்தவித ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications