கட்டாய ஹெல்மெட்டுக்கு தடையில்லை:திட்டமிட்டபடி ஜூன் 1 முதல் அமல்
மதுரை: இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாநகரங்களில் ஜூன் 1ம் தேதி முதலும், பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதலும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மதுரை ஒத்தகடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 1984ல், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அப்போது மருத்துவ நிபுணர் குழு ஒன்று ஹெல்மெட் அணிவதால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ந்தது.
அந்த ஆய்வின் இறுதியில், ஹெல்மட் அணிவதால், நரம்புகள் பாதிக்கப்படும் என அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றது. அந்த மருத்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெல்மட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மேலும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் மிகவும் மோசமானதாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது.
ஐஎஸ்ஐ தர நிர்ணய கட்டுபாட்டு அமைப்பு ஹெல்மெட் அணிந்து செல்லும்போது கடுமையான விபத்துகள் ஏற்பட்டால் உயிரை பாதுகாத்து கொள்ளலாம் என உறுதியளிக்க முடியாது என தெரிவித்துள்ளதால் இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மக்கள் கருத்தை கேட்காமல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் குழு கூறியுள்ளது. எனவே ஹெல்மெட் அணிவதை அவரவர் விருப்பதிற்கு விடவேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெசி ஜீவப்பிரியா, இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிஸ்ரா, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications