பார் விபத்து: சாவு எண்ணிக்கை 29 ஆனதுபார் உரிமையாளர் கைது
கோயம்பத்தூர்:திருப்பூர் டாஸ்மாக் மது பார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆனது.
திருப்பூர் அங்கேரி பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்குப் பின்புறம் பார் உள்ளது. இந்தப் பாரையொட்டி இருந்த கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மது அருந்திக் கொண்டிருந்த 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நேற்று ஒருவர் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், பார் உரிமையாளர் கந்தசாமியை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது அடிப்படை வசதிகள் இல்லாமல் பார் நடத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இவருக்கு 15 பார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் இன்று கோவை வந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications