ஓடும் ரயிலில் கீ கீ, கூ கூ;கிளி-குருவி கடத்திய 4 பேர் கைது!
ஈரோடு:நூற்றுக்கணக்கான கிளிகள், குருவிகளை கூடைகளில் அடைத்து வைத்து கடத்திச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்து, குருவிகள், கிளிகளைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸார் வழக்கமான ரோந்து சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, கிளி, குருவிகளின் சப்தம் கேட்டு குழம்பினர். ஓடும் ரயிலில் பறவைகள் கத்துகின்றனவே என்று யோசித்த அவர்கள் சென்று பார்த்தபோது, ஒரு பெடச்டியில், 10க்கும் அதிகமான கூண்டுகளில் 300 கிளிகளும், 300 சிட்டுக்குருவிகளும் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அந்தக் கூடைகளுடன் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரித்தபோது, கரூர், கொடுமுடி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து இவற்றைப் பிடித்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இவற்றை 1 மாதம் வளர்த்து அதை கேரளாவிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது இவர்களின் தொழிலாம்.
இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஈரோடு ரயில்வே நிலையம் வந்ததும் நால்வரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கிளி, குருவிகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிடிபட்ட கிளி, குருவிகளை காட்டுக்குள் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications