சென்னை திரும்பினார் ஜெயலலிதா:ராஜ்யசபா தேர்தல் குறித்து திருப்தி
சென்னை:கொடநாடு தோட்டத்தில் ஓய்வெடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை திரும்பினார். ராஜ்யசபா தேர்தல் நியாயமாக நடைபெறவுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் திருப்தி தெரிவித்தார்.
ஊட்டி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் நெருங்குவதாலும், மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், அவர் ஊட்டியிலிருந்து சென்னை திரும்பினார்.
நேற்று காலை 11 மணிக்கு நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலிலதாவைச் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து கோவைக்குக் கிளம்பினார்.
கோவை வரும் வழியெங்கும் அதிமுகவினர் திரளாக கூடி நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காரில் இருந்தபடியே ஜெயலலிதா பேசினார். அவரிடம் ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் நடக்கக் கூடாது, திமுக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே போட்டியிடும், அதிமுக 2 இடங்களில் வெல்லட்டும் என முதல்வர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
இதுதான் நியாயமான தேர்தல், இப்படித்தான் நடக்க வேண்டும். முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்றார்.
கனிமொழி குறித்த கேள்விக்கு, இதற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
பிச்சை எடுத்த காசில்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.6 கோடி வழங்கிய.. மதுரை யாசகர்! சுவாரசிய தகவல் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications