தொடர் மழை-ஊட்டியில் நிலச்சரிவு:பஸ்-ரயில் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்:தொடர் மழையால் ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் பர்லியார்-மரப்பாலம் இடையே நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ராட்சத பாறைகள் ரோட்டியில் உருண்டு விழந்தன. இதனால் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் நேற்று இரவு முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் மேட்டுபாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் சில்குரோவ்-நன்னிமேடு ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ராட்ச பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் விழுந்துள்ள பாறைகளை அகற்றும் பணிக்காக ஊழியர்கள் விரைந்துள்ளனர்.
கனமழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலை ரயில் பாதையில் 22க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications