துணை நடிகை தீபா இலங்கைக்கு கடத்தல்? நடிகை புகார்
சென்னை:மயமான துணை நடிகை தீபா இலங்கைக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என மற்றொரு துணை நடிகை பிரியா என்பவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
வியாசர்பாடி சர்மாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வளர்ப்பு மகள் தீபா (16) வம்புச்சண்ட, வசந்தம் வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 8ம் தேதி படப்படிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தீபா வீடு திறப்பவில்லை. இதுகுறித்து செல்வராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.
![]() |
அதில் போரூரை சேர்ந்த சினிமா ஏஜென்ட் ஜனநாயகம் என்பவர், எனது மகளை படப்படிப்புக்கு அழைத்து சென்றார். தற்போது அவரையும் காணவில்லை. எனவே தீபாவை அவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே அவரிடம் இருந்த எனது மகளை மீட்டுத் தாருங்கள் என கூறியிருந்தார்.
ஆனால், தீபாவின் பெயரில் ஒரு கடிதம் போலீசாருக்கு வந்தது. அதில் ஜனநாயகம் தன்னை கடத்தவில்லை என்றும் அவருடன் தானே சென்றதாகவும் கூறியிருந்தார்.
இந் நிலையில் மற்றொரு துணை நடிகையான பிரியா, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
ஜனநாயகம், பாலா, சலீம் ஆகிய 3 பேரும் சினிமா ஏஜென்டுகள். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என ஆசைவார்த்தைகள் கூறி பணம், நகைகளை பிடுங்கிக் கொள்வார்கள். அவர்களை நம்பி செல்லும் பெண்களை லாட்ஜ், ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று அவர்களுடன் உல்லாசமாக இருப்பார்கள்.
பின்பு அவர்களை விபசார தொழில் ஈடுபடுத்தி விடுபார்கள். மயமான நடிகை தீபாவை அவர்களுடன் நான் பலமுறை பார்த்துள்ளேன்.
என்னை ஹீரோயினாக நடிக்க வைப்பதாக பாலா, சலீம் ஆகிய இருவரும் ஆசைவார்த்தை கூறி என்னிடம் இருந்து 10 பவுன் நகையை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் தான் இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என தெரிந்து பாலா, சலீமிடம் என நகையை திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர்.
இதனால் அவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இந்த வழங்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில் தீபா மாயமான செய்தியை நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன். தீபாவை ஜனாநாயகம் இலங்கைக்கு கடத்தி இருக்கலாம் அல்லது அவரை விபசாரத்தில் தள்ளியிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications