ஜெயலலிதாவுடன் வாஜ்பாய் பேச்சு:ஷெகாவத்துக்கு ஆதரவு கேட்டார்
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆதரவு கேட்டார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படவுள்ள பைரான் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார்.
அதற்கு ஜெயலலிதா, அதிமுக தற்போது தனி அணியில் உள்ளது. இந்த அணியில் தெலுங்குதேசம், சமாஜ்வாடி கட்சி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்களிடம் கேட்காமல் தன்னிச்சையாக எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாது.
இந்தக் கட்சிகளின் தலைவரக்ளுடன் ஆலோசிக்க வேண்டும், எனது கட்சித் தலைவர்களுடனும் ஆலோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா. இதையடுத்து சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொள்வதாக வாஜ்பாய் கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விவாதிக்க ஹைதராபாத்தில் 3வது அணி தலைவர்கள் கலந்து கொள்கிற ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதாவும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
ஷெகாவத்தை கைவிட்ட ஜோதிபாசு:
அதே போல இன்று கொல்கத்தா சென்ற துணை ஜனாதிபதி ஷெகாவத், மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசுவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு நேரில் ஆதரவு கோரினார்.
ஆனால், காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரைத் தான் ஆதரிக்கப் போவதாக அவரிடம் ஜோதிபாசு கூறிவிட்டார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications