டி.ஆர்.பாலுவை ஓட விட்ட தொழிலாளர்கள்
விசாகப்பட்டனம்:மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை விசாகப்பட்டனம் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்ததால் டி.ஆர்.பாலு அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெளியேற நேரிட்டது.
விசாகப்பட்டத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலையை சீரமைத்து ஸ்திரப்படுத்த வேண்டும் என அத்தொழிற்சாலை ஊழியர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் மத்திய கப்பல் துறை இதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குப் புதிய கப்பல் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு டி.ஆர்.பாலு வந்தார்.
அப்போது தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைககள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பாலுவை நோக்கி வந்து முற்றுகையிட்டனர். இதைப் பார்த்த பாலு அங்கு எதுவும் பேசாமல் கப்பலில் ஏறினார். கூடவே அதிகாரிகளும் கப்பலில் ஏறினர்.
ஆனால், தொடர்ந்து தொழிலாளர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்ததால் தனது பேச்சை பாதியிலேயே ரத்து செய்து விட்டு அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெளியேறினார் பாலு.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications