சர்க்கரை வியாதியஸ்தர்களுக்காக திருமண இணையதளம்
டெல்லி:சர்க்கரை வியாதியுடன் உள்ளவர்களின் திருமணத் தேவைக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
www.diabeticmatrimony.comஎன்ற இந்த இணைய தளத்தில் சர்க்கரை வியாதியுடன் உள்ள மணமக்களின் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அவர்கள் குறித்த தகவல்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருக்கும் என்பதுதான் இந்த இணையதளத்தின் விசேஷ அம்சம்.
சர்க்கரை வியாதியுடன் உள்ள பலருக்கு திருமணம் ஆவதில் பல சிரமங்கள் உள்ளன. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சர்க்கரை வியாதியுடன் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் சர்க்கரை வியாதி குறித்த உண்மைத் தகவல்கள், சர்க்கரை வியாதியை எப்படி எதிர்கொள்வது, சர்க்கரை நோய்க்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
சர்க்கரை வியாதியுடன் இருந்தபோதிலும் அதையும் தாண்டி பல்வேறு சாதனைகள் புரிந்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், 1999ம் ஆண்டு மிஸ் அமெரிக்காவாக தேர்வு செய்யப்பட்டவரும், சர்வதேச அளவில் சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளவருமான நிக்கோல் ஜான்சன், டிவி தொகுப்பாளர் கெளரவ் கபூர் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் கலைஞானி கமல்ஹாசனும் இருப்பதாக இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
டெல்லி சர்க்கரை வியாதி ஆய்வு மையம் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது. இணைய தள தொடக்க நிகழ்ச்சியில், நிக்கோல் ஜான்சன், கெளரவ் கபூர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
நிக்கோல் பேசுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு டைப்1 சர்க்கரை வியாதி கண்டறியப்பட்டது. ஆனால் தனது அயராத உழைப்பாலும், மன திடத்தாலும், அதிலிருந்து மீண்டு விட்டேன்.
சர்க்கரை வியாதியுடன்தான் நான் எனது லட்சியங்களை அடைந்தேன். அழகியாக தேர்வு பெற்றேன். கல்யாணம் செய்து கொண்டேன், ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கும் தாயானேன்.
சர்க்கரை வியாதி வந்து விட்டால் யாரும் பயப்படக் கூடாது. மாறாக மனோதிடத்துடன் செயல்பட வேண்டும். சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்றார் நிக்கோல்.
உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை வியாதிக்காரர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4.6 கோடி பேர் இந்தியாவில் சர்க்கரை வியாதியுடன் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ல் 8 கோடியாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications