போலீஸ் பாதுகாப்பில் ரெளடி வெட்டிக் கொலைதூத்துக்குடியில் நடுரோட்டில் பயங்கரம்
தூத்துக்குடி:நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ரெளடி போலீசார் முன்னிலையிலேயே எதிர் கோஷ்டியால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கரபாண்டி. பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பாண்டி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக இன்று சங்கரபண்டியை போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு பேருந்தில் அழைத்து வந்தனர்.
பஸசில் இருந்து இறங்கியவுடன் ஒரு கும்பல் சங்கரபாண்டியை சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் வெட்டிச் சாய்த்தது. அவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.
போதிய பாதுகாப்பு இல்லாமல் அழைத்து வந்ததால் இச் சம்பவம் நடந்துள்ளது.
வெட்டப்பட்ட சங்கரபாண்டி அந்த இடத்திலேயே இறந்தார்.
அவரால் கொலை செய்யப்பட்டவரின் ஆட்கள் தான் இந்தக் கொலையை செய்ததாகக் தெரிகிறது.












Click it and Unblock the Notifications