ராஜஸ்தானில் பயங்கர ஜாதி கலவரம்-27 பேர் பலி:பிரதமரை சந்தித்தார் அத்வானி
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் குர்ஜார் இன மக்களின் போராட்டம் ஜாதிக் கலவரமாக மாறியது. இந்த மோதலில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த குர்ஜார் இனமக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அங்கு கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தை தடுக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலுள்ள குர்ஜார் இனமக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் அரசு குர்ஜார் இனத் தலைவர்களுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பேராட்டம் ஓயவில்லை.
இந் நிலையில் இந்தப் போராட்டம் சாதிக் கலவரமாக மாறியுள்ளது. குர்ஜார் இன மக்களை எதிர்த்து மீனாஸ் சாதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மீனாஸ் இனத்தினர் பழங்குடி பிரிவினர் ஆவர்.
இந்த இரு ஜாதியினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.
ராஜஸ்தானில் குர்ஜார் ஜாதி மக்கள் 2 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் பழங்குடி பட்டியலிலுள்ள மீனாஸ் இன மக்கள் 12 சதவீதம் உள்ளனர்.
தங்களைவிட அதிகமுள்ள மீனாஸ் இனமக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும்போது எங்களுக்கு ஏன் தரவில்லை என குர்ஜார் இனமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
குர்ஜார் இனத்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டால் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் வழங்கப்படும். அதனால் தங்களுடைய இனம் பாதிக்கப்படும் என மீனாஸ் இனத்தவர்கள் கருதுவதால் குர்ஜார்களுக்கு பழங்குடி இன அந்தஸ்து கொடுக்கக் கூடாது என அவர்கள் பதில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்றிரவு முதல் வெடித்த வன்முறையில் இரு தரப்பிலும் 9 பேர் பலியாகியுள்ளனர். தெளசா மாவட்டத்தில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. லால்கோட் அருகே குர்ஜார் இனத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
போலீஸாரால் இந்த கலவரத்தை கட்டுபடுத்த முடியாததால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
குர்ஜார் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளதால் குர்ஜார் இனத்தவர்கள் அரசின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.
இந் நிலையில் மீனாஸ் இனத்தவர் சேர்ந்த ஒருவரை குர்ஜார் மக்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும் குர்ஜார் மக்கள் தொடர்பாக அதிக செய்திகளை வெளியிடுவதாகக் டிவி, பத்திரிக்கை நிருபர்கள் மீதும் மீனாஸ் இனத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதுவரை இந்த கலவரத்தில 27 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பதட்டமான பகுதியில ராணுவ வீரர்கள் ரோந்து வரும் நிலையிலும் கலவரம் தொடர்நது வருகிறது.
இதற்க முடிவு காண முடியாத நிலையில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் பாஜக அரசு தவித்து கொண்டிருக்கிறது.
பிரதமரை சந்தித்தார் அத்வானி:
இந் நிலையில் ராஜஸ்தான் சாதிக் கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரி பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி மற்றும் மூத்த தலைவர்களே கூடி இந்த பிரச்சனை குறித்து ஆேலாசித்தனர்.வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பிரதமரை அத்வானி சந்தித்தார்.
இந் நிலையில் ராஜஸ்தான் சாதிக் கலவரத்துக்கு பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே தான் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுவுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications