கடலூரில் பிடிபட்ட சிங்கள மீனவர்கள் விடுதலை
கடலூர்:கடலூர் அருகே கடலில் திசை மாறி வந்ததாக பிடிபட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி இலங்கையைச் சேர்ந்த இந்த 6 மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திசை மாறி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதிக்கு வந்து விட்டனர். அவர்களை கடலூர் புது நகர் போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆறு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை மீட்பது குறித்து இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து அவர்களை விடுவிக்க அரசுத் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று 6 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இலங்கைத் துணைத் தூதரக அதிகாரி மகரேஜிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிங்கள மீனவர்களை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ, இலங்கை அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications