தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வேண்டும்:கருணாநிதியின் பிறந்த நாள் ஆசை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதுவே எனது பிறந்த நாள் ஆசை, செய்தி என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தனது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, எண்ணம்.
அதேபோல இந்தியாவின் ஒருமைப்பாடும், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையும் ஏற்பட வேண்டும். அதற்கேற்ப நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதும் எனது ஆசை, திமுகவின் குறிக்கோளும் கூட.
இவை நிறைவேற தமிழர்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் திடமாக ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு நான் கேட்டுக் கொள்வது இந்த ஆண்டு மாத்திரம் அல்ல தொடர்ந்து எனது பிறந்த நாள் செய்தியாக இருக்கும் என கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications