இந்தியா மறுப்பு-சீனாவிடம் தாவிய இலங்கை:37 மில்லியன் டாலருக்கு ஆயுத ஒப்பந்தம்
டெல்லி:விடுதலைப் புலிகளை சமாளிக்கத் தேவையான ஆயுதங்களை வாங்க சீனாவுடன் இலங்கை அரசு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை சீனா வழங்கவுள்ளது.
விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. புலிகளின் விமான பலத்தைத் தகர்த்து தாக்குதல் நடத்த தேவையான ஏவுகணைகள், ரேடார் கருவிகளை வழங்குமாறு இந்தியாவை இலங்கை கோரியது.
ஒருவேளை இந்தியா இந்த உதவிகளை செய்ய மறுத்தால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் உதவி கோரப் போவதாகவும் அது மிரட்டல் தொணியில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளில் இலங்கைக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இலங்கை அரசு, இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை ஜேன்ஸ் வீக்லி பத்திரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 37.6 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த பாலி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இலங்கை ராணுவம் மற்றும் கடற்படைக்குத் தேவையான உதவிகளை இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும். இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைக்குத் தேவையான வெடிபொருட்கள், தாக்குதல் ஆயுதங்களை பாலி நிறுவனம் வழங்கவுள்ளதாக ஜேன்ஸ் வீக்லியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications