புலிகள் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வவுனியாவில் விடுதலைப் புலிகள் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
வவுனியா மாவட்டம் பம்பை மேடு என்ற இடத்தில் இலங்கை ராணுவ முகாம் மீது நேற்று இரவு விடுதலைப் புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். ராக்கெட் வீசியும், பீரங்கிகளாலும் சுட்டுத் தாக்குதல் நடத்தினர்.
ராணுவத்தினரும் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்னர். பல மணி நேரம் நீடித்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புலிகளின் தாக்குதலில் ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ராணுவத் தரப்பில் ஒருவர் மட்டுமே பலியானதாக கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications