ஸ்ரீவில்லிபுத்தூர்: பஸ்-கார் விபத்தில் 3 பேர் பலி
விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேருந்து மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
தென்காசியை சேர்ந்த சுப்பிரமணியம், இன்று காலை தன் குடும்பத்துடன் காரில் மதுரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த சுப்பிரமணியம், அவருடை மனைவி கோமதி, மகள் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவருடைய இன்னொரு மகளான பிரியா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் பேருந்து விபத்தில் 2 பேர் பலி:
நீலமங்கலத்தில் வாய்க்கால் பாலம் மீது பேருந்து மோதியதனால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
கள்ளக்குறிச்சியிலிருந்து அரசு பேருந்து நீலமங்கலம் வந்து கொண்டிருந்தது. அப்போது வழியிலிருந்த வாய்க்கால் பாலத்தை கடந்து செல்ல முயன்ற எதிர்பாராதவிதமாக அந்த பாலத்தின் மீது மோதியது.
இதனால் அதில் பயணம் செய்த மருதாய்(45), மணிவேல்(40) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications