ஹைரதாபாத் செல்கிறார் ஜெயலலிதா:நாயுடு, அமர்சிங்குடன் முக்கிய ஆலோசனை
சென்னை:குடியரசுத் தலைவர் வேட்பாளர், 3வது அணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை ஹைதராபாத் செல்கிறார்.
தேசிய அளவில் 3வது அணியை அமைக்கும் முயற்சியில் ஜெயலலிதா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மும்முரமாக உள்ளனர்.
இப்போது இவர்கள் அமைத்துள்ள புதிய கூட்டணியில் இந்த மூன்று கட்சிகள் தவிர அஸ்ஸாம் கன பரிஷத், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஹைதராபாத்தில் இந்த அணியின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா நாளை இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் செல்கிறார். மூன்று நாட்கள் அவர் அங்கு இருக்கிறார்.
அப்போது சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அமர்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 8ம் தேதி சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications