தர்மபுரி பஸ் எரிப்பு: 28 அதிமுகவினருக்கு கூடுதல் தண்டனை கோரி வழக்கு
சென்னை:தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 28 பேருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கக் கோரி பலியான மாணவி ஹேமலதாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தர்மபுரியில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் தீவைத்துக் கொளுத்தியதில், ஹேமலதா, கோகிலவாணி உள்ளிட்ட 3 மாணவிகள் பரிதாபமாக உயிரோடு எரிந்து இறந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் அமர்வு நீதிமன்றம், நெடு என்கிற நெடுஞ்செழியன் உள்ளிட்ட 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேந்திரன் உள்ளிட்ட 28 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த நிைலயில் 28 பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கக் கோரி ஹேமலதாவின் தந்தை கேசவ சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிபிசிஐடி போலீஸ் மற்றும் 28 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications