சவ ஊர்வலத்தில் அடிதடி-10 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்படியில் வசித்து வந்தவர் ரவிசங்கர். இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இன்று ரவிசங்கருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.
இறுதி சடங்கில் சவ ஊர்வலம் முன் அன்பழகன் என்பவர் குடித்து விட்டு ஆட்டம் போட்டார். ரவிசங்கரின் உடல் மையனத்திற்கு கொண்டு சென்றவுடன் அன்பழகன் ரகளை செய்தார்.
இதையடுத்து ரவிசங்கரின் உறவினர் கருணாகரன் என்பவரை அடித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக எம்கேபி நகர் போலீஸார் 10 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications