டீ கடையில் சிலிண்டர் வெடித்து ஏட்டு உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:சிவகாசியில் டீக்கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
சுந்தரராஜன் என்பவர் சாமிபுரம் காலனியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கூரை மளமளவென எரிய தொடங்கியது.
இதையடுத்து தீயை அணைக்க அங்கு பொது மக்கள் ஓடி வந்தர். அப்போது கடைக்குள் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த லோடுமேன்கள் செல்வராஜ்(19), பெரியசாமி(23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் போலீஸ் ஏட்டு கோவிந்தராஜ், வைரமுத்து, குணசீலன், முனியாண்டி, ஜெய்னூதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக இவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஏட்டு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications