அதிமுக அலுவலகத்தை இடிப்பதா? சுவாமி டென்ஷன்
சென்னை:அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதற்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக தலைமைக் கழகத்தை இடிக்கச் சொல்லி உத்தரவிட்ட விவகாரத்தில் கருணாநிதியின் சதித் திட்டம் அடங்கியுள்ளது.
இதுதொடர்பாக ஜெயலலிதா கண்டித்து அறிக்கை விட்ட பின்னர் மழுப்பலாக ஒரு பதிலை அளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
சம்பந்தப்பட்ட துறையை தன் வசம் வைத்துள்ள கருணாநிதிக்கு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நோட்டீஸ் குறித்து தெரியாது என்று கூறியிருப்பது, நிர்வாகம் அவரது கையில் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
எனவே இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications