பாகிஸ்தானுக்கு சைக்கிளில் செல்லும் 2 தமிழர்கள்
மதுரை:தீவிரவாதத்தை எதிர்த்து இரு தமிழக இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் செயலாளரான மதுரை வீரன் (40) மக்களிடையே அன்பு, அமைதியை வலியுறுத்தி அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
டாக்ஸி டிரைவரான இவர் இதுவரை பொது அமைதிக்காக 33 முறை நீண்ட தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.
இதே போல திண்டுக்கல் அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்த திருமலைச்சாமியும் (30)சமூக ஒற்றுமைக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருபவர்.
இந் நிலையில் இப்போது இந்த இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 11ம் தேதி இவர்களது பயணத்தை மதுரை கலெக்டர் ஜவஹர் துவக்கி வைத்தார். இவர்கள் நேற்று பெங்களூர் வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் வரை 4,800 கி.மீ. தூரத்துக்கு இவர்கள் சைக்கிள் ஓட்டவுள்ளனர். ஜூன் 27ம் தேதி லாகூர் சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications