மனுத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன்
சென்னைராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பி.எஸ்.ஞானதேசிகன் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
![]() |
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன், இளவரசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் ராஜா ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. நேற்று காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் ஞானதேசிகனே அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன். அவருடன் மத்திய அமைச்சர்கள் ராஜா, பழனிமாணிக்கம், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் ஆகியோரும் உடன் சென்றனர்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், யசோதா, அருள் அன்பரசு, விடியல் சேகர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தேர்தல் அதிகாரியான நரேஷ்குப்தாவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன்.
முன்னதாக முதல்வர் கருணாநிதியை ஞானதேசிகன் சந்தித்து ஆசி பெற்றார். வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்தது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள பத்மராஜனின் மனு தள்ளுபடியாகி விடும் என்பதால் மனு தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications