மலேசியாவில் விபத்து- இறையன்பு படுகாயம்
சென்னை:மலேசியாவில் நடந்த சாலை விபத்தில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இறையன்பு, சன்வத்ராம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு. அதேபோல, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக இருப்பவர் சன்வத்ராம்.
இரு ஐஏஎஸ் அதிகாரிகளும், மலேசியாவில் அலுவல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கோலாலம்பூர் அருகே உள்ள ஒரு தீவில் அவர்கள் காரில் போய்க் கொண்டிருந்தனர். அப்போது, கார் விபத்தில் சிக்கியது.
இதில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் காயமடைந்தனர். கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.
அதில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இறையன்புவுக்கு ஒரு காலிலும், சன்வத்ராமுக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவருக்கும் முறிவு ஏற்பட்ட இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இருவரும் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications