தாவூத் கும்பல் மிரட்டல்-தமிழகத்துக்கு தப்பிவந்துள்ள மும்பை வைர வியாபாரி குடும்பம்
நாகர்கோவில்:தீவிரவாதிகளுக்கு பயந்து மும்பையை சேர்ந்த வைர வியாபாரி குடும்பத்துடன் நாகர்கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மும்பை பஞ்ச்கர்ணியை சேர்ந்த வைர வியாபாரி சங்கர் பஜன்லால் ஹேம்தேவ்(40), மனைவி கஞ்சன் ஹேம்தேவ் மற்றும் மகன் ரவி ஹேம்தேவ் ஆகியோர் நேற்று நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு பஜன்லால் கூறுகையில்,
நான் மும்பையில் விலையுயர்ந்த முத்துக்கள், வைரக் கற்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தேன். ஜாதகரீதியில் பிரேஸ்லெட் செய்து கொடுத்து வந்தேன். பிரபலங்கள் பலருக்கும் பிரேஸ்லெட் செய்து தந்துள்ளேன். ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5,000 முதல் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்.
இந் நிலையில் மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்தவர்கள் என்னை தேடி வந்து அவருடைய மகளுக்கு பிரேஸ்லெட் செய்து தருமாறும், அதற்கு ரூ.1 கோடி தருவதாகவும் கூறினர்.
ஆனால் அதை செய்தால் தீவிரவாதிகளுக்கு உதவியது போல் ஆகும் என்பதால் மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எனக்கு பலவகையிலும் தொந்தரவு அளித்தனர்.
இது குறித்து பஞ்ச்கர்ணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தேன். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இருந்தாலும் அவர்களுடைய ஆட்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு பயந்து நானும் என் குடும்பமும் சண்டிகார், சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினோம். ஆனாலும் அவர்கள் எங்களை தேடிக் கண்டுபிடித்து மிரட்டினர்.
இது தொடர்பாக சில காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து பேசியபோது, தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு சென்றால் தீவிரவாதிகள் தொந்தரவு இருக்காது. அங்கு செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினர்.
இதனால் நாங்கள் கன்னியாகுமரி வந்துள்ளோம். இங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். இங்கு நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தமிழக அரசு தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக நாகர்கோவில் கலெக்டரிடமும் பஜன்லால் மனு கொடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications