படிக்காத அப்பாவி பயணிகளைஎட்டி உதைத்த ரயில்வே கார்ட்
திருச்சி:ரயிலில் பெட்டி மாறி ஏறிய, இரு படிக்காத பாமர பயணிகளை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய ரயில்வே கார்டின் செயலால் பிற பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கலைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது சகோதரி ரங்கநாயகி. இருவரும் படிக்காதவர்கள். திண்டுக்கலிலிருந்து சென்னை செல்ல டிக்கெட் எடுத்தனர். இருவருக்கும் சேர்த்து ஒரே டிக்கெட் தரப்பட்டிருந்தது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அவசரத்தில் கவனிக்காமல் சகோதரியுடன் மகளிர் பெட்டியில் ஏறி விட்டார் ஆறுமுகம். இதையடுத்து திருச்சி வந்தவுடன் அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி பொதுப் பெட்டிக்குச் சென்றார்.
அங்கு போன பின்னர்தான் டிக்கெட் தன்னிடம் இல்லை, ரங்கநாயகியிடம் இருப்பதை அறிந்தார். உடனடியாக கீழிறங்கி ரங்கநாயகி இருந்த பெட்டிக்கு ஓடினார். அவரை கீழிறங்கி வருமாறு கூறினார். ஆனால் அதற்குள் ரயில் கிளம்பி விட்டது.
இதையடுத்து அடுத்த பெட்டியில் நின்றிருந்த ரயில்வே கார்டிடம் ரயிலை நிறுத்துமாறு கோரினார். கார்டு ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி வந்து ஆறுமுகத்தை காலால் எட்டி உதைத்தார். இந்த நிலையில் கீழே இறங்கி விட்ட ரங்கநாயகி, தனது சகோதரரை ரயில்வே கார்டு காலால் உதைத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இருவரும் பொதுப் பெட்டியில் போய் ஏறுவற்குள் ரயில் கிளம்ப சிக்னல் காட்டினார் கார்ட். இதையடுத்து ஆறுமுகமும், ரங்கநாயகியும் ரயிலில் ஏற முடியாமல் போனது.
அடுத்து நடந்ததுதான் அதை விட பெரிய கொடுமை. தங்களுக்கு நேர்ந்த கதி குறித்து அங்கிருந்த ரயில்வே காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கூறினார். அப்போது அங்கிருந்த காவலர்கள் ஆறுமுகம் வைத்திருந்த டிக்கெட்டைப் பிடுங்கிக் கொண்டனர். மேலும் அவர் வைத்திருந்த கொஞ்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.
இப்படி ரயில்வே கார்டால் துரத்தப்பட்டும், காவலர்களால் பணம் பறிக்கப்பட்டும் பரிதவித்த இருவருக்கும், அங்கிருந்த பயணிகள் ஆளுக்குக் கொஞ்சமாக பணம் கொடுத்து வேறு ரயிலில் செல்லுமாறு அறிவுரை கூறினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications