சட்டத்தை மீறியவர்களை காப்பாற்றுவதா?-ராமதாஸ்
சென்னை:சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டத்தை மறு பரிசீலனை செய்ய தமிழக அரசு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இது சட்டத்தை மீறியவர்களை அரசு காப்பாற்றுவதற்கு சமம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
சென்னையில் விதிகளை மீறி 75,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் விஷயத்தில் எந்த கருணையும் காட்ட கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசு அவர்களுக்கு ஆதரவாக மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் குழுவையும் அமைத்துள்ளது.
சட்டவிதிகளை மீறியவர்களை அரசே காப்பாற்றுவதா. இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.
இந்த 75,000 கட்டிடங்களும் தெரிந்தே தான் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களால் சென்னை மக்கள் வசிக்க முடியாத பகுதியாவிடும். சென்னை மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு விதிமுறை மீறிய கட்டிடங்களை காப்பாற்றவே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிமுகவிற்கு நோட்டீஸ் விட்டுள்ளதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.
விதி மீறல் கட்டிடங்களுக்கு ஆதரவாக சிலர் செயல்படுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
விதி மீறல் கட்டிடங்களுக்கு ஆதரவாக செயல்படாமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
ஹெல்மெட், பொது இடங்களில் புகை பிடிக்க தடை உள்ளிட்ட சட்டங்கள் மக்கள் உயிரை பாதுகாக்க கொண்டு வரப்பட்டவை. இச்சட்டங்களை பொதுமக்கள் மதித்து பின்பற்ற வேண்டும்.
இலங்கை போராளிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்பது பைத்தியகாரத்தனம். இந்திய ராணுவம் இமயமலைப் போன்றது. இதனுடன் இலங்கை போராளிகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. இது இலங்கை இனவாத அரசு பரப்பும் பொய் பிரச்சாரம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications