பார்ட்டி ஆரம்பிக்க ஃபார்ம் வாங்கினார் சரத்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதை எப்படிப் பதிவு செய்வது என்பது உள்ளிட்ட விவரங்களை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியை சந்தித்து நடிகர் சரத்குமார் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர் கட்சியைப் பதிவு செய்வது தொடர்பான விண்ணப்ப பாரங்களையும் வாங்கினார்.

Sarathkumar with Gopalsamy

நாடார் சமுதாயத்தினரை நம்பி புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் ஆவலில் உள்ளார் சரத்குமார். இதற்கு முன்னோட்டமாக விருதுநகரில் சமீபத்தில் காமராஜர் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து அவர் விரைவில் அரசியல் களத்தில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லி சென்ற சரத்குமார் அங்கு தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியை சந்தித்து புதுக் கட்சி ஆரம்பித்தால் அதை எப்படிப் பதிவு செய்வது என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.

பின்னர் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் புதுக் கட்சியை பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பப் பாரங்களையும் அவர் வாங்கிக் கொண்டார். சரத்குமாருடன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சரத்தின் ஆலோசகர் போல செயல்படுவருமான முருகன், நாடார் சமுதாயப் பிரமுகர்கள் எர்ணாவூர் நாராயணன், கரு. நாகராஜன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+