நெல்லை-மழையில் சுவர் இடிந்து 2 சிறுமிகள் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் பலியானார்கள்.
நேற்றிரவு திருநெல்வேலியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பேட்டை பகுதியில் மரம் சாய்ந்து வீட்டின் சுவர் மீது விழுந்தது.
இதனால் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோமதியம்மாள்(55), ரேவதி(12), கண்ணம்மாள்(9) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேவதி, கண்ணம்மாள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications