தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தலைவராகஎம்.ஜி.எம்.மாறன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியன் தலைவராக எம்.ஜி.எம். குழும இயக்குநர் எம்.ஜி.எம். மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

நாடார் சமுதாயத்தினர் வசம் இருந்த வங்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. இந்த வங்கியை கோவையைச் சேர்ந்த சிவசங்கரன் பிள்ளை வாங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாடார் சமுதாயத்தினர் சிவசங்கரன் பிள்ளை வாங்கிய பங்குகளை திரும்ப வாங்க நிதி திரட்டினர்.

இதுதொடர்பாக தற்போது நாடார் சமுதாயத்தினரிடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பங்குகளை வாங்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திரன் ஆதித்தன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது குழுவின் இதர உறுபப்பினர்கள் நிதி முறைகேடு செய்துள்ளதாக போலீஸில் புகார் கொடுததுள்ளனர். அதன் பேரில் ராமச்சந்திர ஆதித்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெர்க்கண்டைல் வங்கியின் தலைவராக எம்.ஜி.எம். மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

38 வயதே ஆகும் மாறன், மெர்க்கண்டைல் வங்கியின் இயக்குநராக கடந்த 2000மாது ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார். இந்திய வங்கிகளிலேயே இளம் வயதில் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளவர் மாறன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.எம். குழும தலைவர் எம்.ஜி.முத்துவின் 2வது மகன்தான் மாறன். எம்.ஜி.எம். குழுமத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்த அவர் ஹோட்டல், கடற்கரை ரிசார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்கா, வர்த்தகம் உள்ளிட்டவற்றில் நிரம்பிய அனுபவம் பெற்றவர்.

எம்.ஜி.எம். குழுமம் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்டின் நிர்வாகத்தையும் இவரே கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+